news

Wednesday, October 10, 2012

தேவேந்த்திரனின் அன்றைய அமைப்புகள் & மாநாடுகள்

ஆவணக் காப்பகம் மற்றும் கள ஆய்வில் சேகரித்தத் தரவுகளிலிருந்து காலனியாட்சிக் காலத்தில்தேவேந்திரர்களுக்கென சுமார் 10 சங்கங்கள் செயல்பட்டிருப்பதனை அறியமுடிகிறது. இராமநாதபுரம்மாவட்டம் பேரையூரில் பெருமாள் பீற்றர் தலைமையில் இயங்கிய சங்கம்தான் தேவேந்திரர்களின் முதல்சங்கம் என்று இதுவரை நிலவிவந்த வரலாறு தவறானது என்பதை ஆவணக் காப்பகத்தில் சேகரிக்கப்பட்டஆதாரத் திலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது. இந்த ஆதாரம் பெருமாள் பீற்ற ருக்கு முன்னரேதேவேந்திரர்கள் மாநாடு நடத்தியிருக்கின்றனர் என்பதனை தெரிவிக்கிறது. திருச்சிராப்பள்ளிஸ்ரீராமசமுத்திரத்தில் 1922ம் ஆண்டு மே மாதம் 20 - 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற திருச்சி ஜில்லாஉழவர்குல மாநாடுதான் தேவேந்திரர்களின் முதல் மாநாடு ஆகும்.1 இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 21தீர்மானங்க ளில் அவர்களுக்கென அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற தீர்மான மும் அடங்கும்ஆனால் மாநாடு நிறைவுற்ற பின்னர் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. மேலும் அமைப்பும்உருவாக்கப்பட்டி ருக்கவில்லை. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் 1925ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியில் ஒருமாநாடும்2, 1931ம் ஆண்டும் மீண்டும் ஒரு மாநாடும்3 திருச்சிராப்பள்ளியில் தேவேந்திரர்கள்நடத்தியிருக்கின்றனர். இந்த மூன்று மாநாடுகளை நடத்தியவர்களுக்கு இடையே தொடர்பு இருந் தது அல்லதுஇல்லை என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் 1922 மற்றும் 1925ம் ஆண்டுகளிலும் 1931ம்ஆண்டிலும் நடைபெற்ற மாநாட்டினை ஒருங்கிணைத்தவர்கள் முறையே தேவேந்தி ரர்களில் மூப்பன் மற்றும்தேவேந்திரர் என்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவு செய்யலாம். காரணம் அவர்கள் தங்கள்பெயர்களின் பின்னொட்டாக மூப்பன், தேவேந்திரர் என்ற உட்சாதி பெயரினையும் சேர்த்திருக்கின்றனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் பருத்திக்கோட்டை மற்றும் ராசவேலுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளர்கள் ஒருமாநாட்டை 23 மார்ச் 1936 தேளூரில் நடத்தியிருக்கின்றனர்.4 இவர்கள் எந்த உட்சாதி யினைச் சேர்ந்தவர்கள்என அறிந்து கொள்ள இயலவில்லை. 1920 களில் சேலம் பகுதியில் ஒரு சங்கம் இருந்திருக்கிறது.5பண்ணாடி என்ற தேவேந்திரர் உட்சாதியினரால் அச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தவிரவேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தென்தமிழகமான திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம்,மதுரை, தேனி மாவட்டங்களில் சுமார் ஏழு அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின் றன. 1922 ஆகஸ்டில்பெருமாள் பீற்றரால் தொடங்கப்பட்ட பூவைசிய இந்திரகுல சங்கம் காலனியாட்சிக் காலத்தில் நீண்டகாலம்செயல்பட்ட இயக்கமாகும்.6 இதே மாவட்டத்தில் தேவேந்திரகுல மகாஜன சபா சார்பில் 20-21 ஜூன் 1925ல்ஒரு மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது.7 பூவைசிய இந்திரகுலம் மற்றும் தேவேந்திரகுலம் என்ற வெவ்வேறுபெயர்களில் ஆனால் ஒரே மாவட்டத்திற்குள் இரண்டு சங்கங்கள் செயல் பட்டிருப்பதிலிருந்து தேவேந்திரர்கள் உட்சாதி அடிப்படையிலேயேதான் ஒருங்கிணைந்திருக்கின்றனர் என்ற முடிவினை மேலும் வலுப்படுத்துகிறது. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் (இப்பகுதி அன்றைய காலத்தில் திருவாங்கூர்சமஸ்தானத்தின் எல்கைக்குள் இருந்தது) பாண்டியர் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை 1924ம்ஆண்டு தோற்றுவித்து செங்கோட்டை தாலுகா அளவிலேயே செயல்பட்டிருக்கின் றனர்.8 1946ம் ஆண்டுஒருமாநாடு நடத்தியதைத் தவிர அந்த அமைப் பின் இதர செயல்பாடு குறித்த எந்தத் தரவும் இல்லை.திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் இந்திரகுலாதிப வேளாளர் அய்க்கிய சங்கம் 1933ல் ஆரம்பிக்கப்பட்டுஅதற்கென தெளிவான அமைப்புவிதிகள் உருவாக்கப் பட்டிருந்த போதிலும் அச்சங்கம்செயல்பட்டிருக்கவில்லை.9 தேனி பகுதி யில் தேவேந்திரகுல வேளாளர் சங்கம் என்ற ஒரு அமைப்புஇருந்திருக் கிறது. இதன் தலைவராக இருந்த பாலசுந்தரராசு தேவேந்திரர்கள் மீதான ஒடுக்குமுறைக்குஎதிரான பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.10 சமத்துவத்துவம் கோரி கேரளாவில் நடைபெற்றபோராட்டத்தினால் ஈர்க்கப்பெற்ற கம்பம் பகுதி தேவேந்திரர்கள் சமத்துவம் கோரி போராடி னர், ஆனால்அவர்கள் அமைப்பு எதுவும் தொடங்கியிருக்கவில்லை”

Saturday, September 22, 2012

பள்ளர்கள் தலித்களா ?


பள்ளர் (அ) மள்ளர் இனத்தினர் எஸ்.சி ( SC ), பி.சி ( BC ), எம்.பி.சி( MBC ), எப்.சி (FC), டி.என்.சி( DNC ) என அனைத்துப் பட்டியலிலும் உள்ளனர். விடுதலைக்கு முன்பும் பின்பும் இந்தியா முழுவதும் இருந்த சாதிகளை சமூக அடிப்படையில் முற்ப்பட்ட சமூகத்தினர் (FC) எனவும் பிற்ப்படுத்தப்பட்ட சமூகத்தவர் (OBC) எனவும் பிரித்தனர். இவர்கள் இல்லாமல் தீண்டாமைக்கு உட்பட்டவர்கள் மற்றும் தீட்டுப்படுத்தக்கூடியதாக கருதப்பட்ட தொழில்களைச் செய்பவர்கள் என்ற அடிப்படையில் 76 சாதிகளை உள்ளடக்கி பட்டியல் சாதியினர் (SC) என்ற பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி ஒரு சாதியை பட்டியல் வகுப்பில் சேர்ப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு 11 வரையறைகளை வகுத்திருந்தது அவற்றில் முக்கியமானவை, அ) தீண்டாமையை அனுபவிப்பவர்கள் ஆ) கோவிலில் நுழைய அனுமதி இல்லாதவர்கள் இ) பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள் ஈ) மாட்டுக்கறி உண்பவர்கள் உ) பசுவை வணங்காதவர்கள் ஊ) தீட்டுப்படுத்தும் தொழிலைச் செய்பவர்கள் என்பவைகளாகும்.
மேலே கூறப்பட்ட வரையறைகளுடன் ஆய்வாளர் எட்கர் தட்சன் எழுதிய "தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்" என்ற புத்தகத்தின் சாதிபற்றிய மேற்கோள்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்புத்தகத்தில் பள்ளர்கள் குடும்பன், காலாடி, பண்ணாடி, மூப்பன், வாதிரியார், பட்டக்காரர், மண்ணாடி போன்ற தொழில்சார்ந்த பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுவதை பக்கம்-486- ல் குறிப்பிட்டுள்ளார். மேற்கூறப்பட்ட வரையறைகளின்படி பள்ளர்கள் தீண்டத்தகாதவர் என முடிவு செய்தால், பள்ளர்களின் இன்னபிற பெயர்களும் எஸ்.சி(SC) பட்டியலில் அல்லவா இருந்திருக்க வேண்டும்? ஆனால் தமிழ்நாட்டின் சாதிப்பட்டியல்களில்,


அ) குடும்பன் - எஸ்.சி பட்டியலிலும் ( SC - 35 )

ஆ) மூப்பன் -பி.சி பட்டியலிலும் (BC - 65 )

இ) காலடி - டி.என்.சி பட்டியலிலும் ( BC - 35 )

ஈ) காலடி -- பி.சி பட்டியலிலும் (DNC - 28 )

உ) மண்ணாடி - எம்.பி.சி பட்டியலிலும் ( MBC - 16 ) உள்ளன.



தீண்டாமைக்கு அளவு கோளாக வைக்கப்பட்டுள்ள தீட்டு ஏற்படுவதாகக் கருதப்படும் தொழில்களைப் பள்ளர்கள் செய்வதில்லை . இந்த நாள் வரையிலும் வேளாண்மையே பள்ளர்களின் தொழிலாக உள்ளது.. பள்ளர்கள் மாட்டுக்கறி உண்பதில்லை . ஏனேனில் தங்களின் குலத் தொழிலான வேளாண்மைக்கு உதவுவதால் மாடுகளைத் தெய்வமாக மதிக்கின்றனர் பள்ளர்கள் .



தமிழ்நாட்டின் பழம்பெரும் கோவில்களான மதுரை மீனாட்சியம்மன்,திருபரங்குன்றம் , பழனி ,திருத்தணி ,திருச்செந்தூர் முருகன் கோவில்கள் , கோவை பேரூர் பட்டிஸ்வரர் , நெல்லையப்பர் , சங்கரன் கோவில் மற்றும் கழுகுமலை உள்ளிட்ட பல கோவில்களில் பள்ளர்களுக்கு பழங்காலந் தொட்டு இன்று வரையிலும் முதல் மரியாதையும் , பள்ளர்கள் சார்ந்த பல விழாக்களும் நடைபெறுகின்றன , இவ்விழாக்களை நடத்துபவர்கள் அக்கோவில்களில் பூசாரிகளாக உள்ள பிராமணர்களே !



1993 - ல் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் நுழைவுப் போராட்டத்திற்கும் பள்ளர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை அன்றைக்கு மட்டும்மல்ல இன்றைக்கும் அதே மீனாட்சியம்மன் கோவிலில் தைப்பூசத்தன்று அறுவடைத் திருவிழாவிலும் மறுநாள் தெப்பத்திருவிழாவிலும் மதுரை அனுப்பானடி ஊர்க்குடும்பர்களுக்கே முதல் மரியாதை செய்யபடுகிறது.


தமிழ் நாடு மட்டுமில்லாது இந்தியா முழுவதுமே அனைத்து பட்டியல்களிலும் (SC, BC, MBC, DNC, FC) உள்ள பள்ளர்களை தலித் ,தாழ்த்தபட்டவன் ,எஸ்.சி(SC),ஆதி திராவிடர் என அழைப்பது பள்ளர்களின் அடையாளத்தை அழிக்கும் திட்டமிட்ட சதியே ஆகும். பள்ளர்களின் அடையாளத்தை மட்டுமில்லாது "பள்ளர்களே சேர சோழ பாண்டியர் " எனும் வரலாற்று உண்மைகளையும் பெருமைகளையும் மறைத்து " இவர்கள் யார் ?" என்பதை உணர்ந்துவிடாமல் , பள்ளர்களை உளவியல் ரீதியகவும் முடக்கும் திட்டமிடபட்ட சதியே ஆகும்

Thursday, September 20, 2012

TIYAGI IMMANUVEL SEKARAN 55 NINAIVANJALI VIDEOS

  
 
                                                                 
                        




















 
MUTHAMILIN NATTINILEY MUTHU PONRA THALAIVARAMMA song
 
  
KATHALAN KATTUKULLA KAIYA VEESI PORA PULLA song
                                                                         
 
                                  MUTHUKULATHUR talukavaam RAMANAD jillavaam song

                                                                      EDIT
                                                                        BY
                                                                    MOHAN

keelakannicheri thiruchendur pathayathirai 2012

keelakannicheri thiruchendur pathayathirai 2012

சாதி குழப்பங்களும் தலித் மயக்கங்களும்

சுதந்தர இந்தியாவில் முதன்முறையாக இந்திய மக்கள் தொகையை சாதிவாரியாகக் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தங்களது எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ள இந்தக் கணக்கெடுப்பு உதவும் என்று ஒவ்வொரு சாதியினரும் நம்புவதால் அவர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழகத்தின் தென்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெரும்பான்மை சமூகமான பள்ளர்களோ, தங்களை எந்தப் பிரிவில் (SC, BC, MBC, DNC) பதிவு செய்வது என்று புரியாமல் மிகவும் குழம்பிப்போய் உள்ளனர்.

ஆங்கிலேயர்கள் காலத்திலும், சுதந்தரத்துக்குப் பின்பும் இந்தியா முழுவதிலும் இருந்த சாதிகளை சமூகப் பொருளாதார அடிப்படையில் ‘முற்பட்ட சமூகத்தினர் (FC)’ என்றும் ‘பிற்படுத்தப்பட்ட (OBC) சமூகத்தினர்’ என்றும் பிரித்தனர். தீட்டுப்படும் தொழில்களைச் (மலம் அள்ளுதல், சாவு மேளம் அடித்தல், வெட்டியான் வேலை போன்றவை)செய்பவர்கள் என்று கருதப்பட்டவர்கள் ‘பட்டியல் சாதியினர் (SC)’ என்று அழைக்கப்பட்டு, அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்பச் சில சலுகைகளையும் வழங்கினார்கள்.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியல் தயாரித்தபோது, பறையர், சக்கிலியர், சாணார், பள்ளர், பள்ளி ஆகிய அனைவரையும் சேர்த்தே பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் சாணார்களும் (நாடார்) பள்ளிகளும் (வன்னியர்) தங்களுக்கு தாழ்த்தப்பட்டோர் (SC)பட்டியலில் இடம் வேண்டாம் என்று முடிவு செய்து வெளியேறிவிட்டனர். இதன்பிறகே தமிழ்நாட்டில் சாணார், பள்ளிகளை தவிர்த்த 76 சாதிகளை (பள்ளர், பறையர், சக்கிலியர், உள்ளிட்ட) பட்டியல் இனத்தில் சேர்த்தனர். அக்காலத்தில் ஒரு சமூகத்தை SC பட்டியலில் சேர்ப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு சில வரையறைகளை வகுத்திருந்தனர். அவற்றில் முக்கியமானவை கீழே:
1. தீண்டாமையை அனுபவிப்பவர்கள்
2. கோவிலில் நுழைய அனுமதியில்லாதவர்கள்
3. பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள்
4. மாட்டுக் கறியை உண்பவர்கள்
5. பசுவை வணங்காதவர்கள்
6. தீட்டுப்படுத்தும் தொழிலை செய்பவர்கள்
மேலே குறிப்பிட்ட சட்டதிட்டங்களுடன் ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டன் எழுதிய ‘தென் இந்திய குலங்களும் குடிகளும்’ என்ற புத்தகத்தில் உள்ள மேற்கோள்களையும் பரிசீலித்தே தமிழகத்தில் SC பட்டியல் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே புத்தகத்தில் அறிஞர் எட்கர் தர்ஸ்டன் பள்ளர்களைப் பற்றி குறிப்பிடும்போது, பொதுவாக பள்ளர்களை மதுரைக்குத் தெற்கே குடும்பன் என்றும், திருச்சி கரூர் பகுதிகளில் மூப்பன் என்றும், கொங்கு பகுதியில் பண்ணாடி என்றும் பட்டக்காரர் என்றும் அழைப்பார்கள் என்று எழுதியுள்ளார். இவர்களுக்கு உதவியாக காலாடி என்றும் மண்ணாடி என்பவர்களும் இருந்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேய அரசு வரையறை செய்தபடி பள்ளர்கள் தீண்டத்தகாதோர் என்று முடிவு செய்தால், எட்கர் தர்ஸ்டன் குறிப்பிட்டுள்ளபடி குடும்பன், மூப்பன், காலாடி, மண்ணாடி உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளும் தமிழ்நாட்டில் SC பட்டியலில் அல்லவா இருந்திருக்க வேண்டும்? ஏன் அவ்வாறில்லை? பட்டியலில் அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.
1. குடும்பன் SC பட்டியல் (SC 35)
2. மூப்பன் BC பட்டியல் (BC 65)
3. காலாடி BC பட்டியல் (BC 35)
4. காலாடி DNC பட்டியல் (DNC 28)
5. மண்ணாடி MBC பட்டியல் (MBC 16)
இவை போக, பள்ளன், தேவேந்திர குலத்தான், கடையன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய பிரிவுகள் SC பட்டியலில் உள்ளன. இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் (உண்மையான வெள்ளாளர்கள் இவர்களே), ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்கள் தமிழ்நாட்டில் எந்தப் பிரிவிலும் இல்லை. இத்தனைக்கும் இப்பெயர்கள் இன்றைக்கும் பள்ளர்கள் இடையே பழக்கத்தில் இருப்பவை.
குடும்பன் தீண்டத் தகாதவன். ஆனால், அவனுக்குப் படைவீரனாக இருந்த காலாடி (பாண்டிய படை மறவர்) மற்றும் குடும்பனின் உப தலைவர்களான மண்ணாடி, மூப்பன் ஆகியோர் BC பட்டியலில் இடம்பெறுகிறார்கள். இது எப்படி? மேலும், தீண்டாமையும், கோவில் நுழையாமையும் SC பட்டியலில் இடம்பெறுவதற்கான தகுதிகள் என்றால், தமிழ்நாட்டில் சாணார்களே (நாடார்கள்) அப்பட்டியலில் இருந்திருக்க வேண்டும்.
குடும்பன் என்ற சாதி தீண்டத்தகாத சாதியாக இருந்தால், இந்தியா முழுவதிலும் ஒரே பட்டியலில் (SC) அல்லவா அவர்கள் இருந்திருக்க வேண்டும்? மாறாக தமிழ்நாட்டில் SC பட்டியலிலும் மற்ற மாநிலங்களில் ஆதிக்க சாதியினராக உயர்சாதிப் பட்டியலிலும் இருப்பது விநோதமாக இல்லையா?
தீண்டாமைக்கு அளவுகோலாக வைக்கப்பட்டுள்ள தீட்டு ஏற்படுத்தக்கூடிய தொழில்களை பள்ளர்கள் செய்வதில்லை என்பதுதான் உண்மை. இன்றுவரை வேளாண்மையே இவர்களுடைய தொழில். மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், பழனி, கோவை, பேரூர், திருச்செந்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பள்ளர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளர்கள் சார்ந்த பல விழாக்கள் இன்றும் நடைபெறுகின்றன. இவ்விழாக்களை நடத்துபவர்கள் அக்கோவில்களில் பூசாரிகளாக உள்ள பிராமணர்களே.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக உள்நுழைந்தவர்கள் சாணார்களும் (நாடார்) பறையர்களுமே ஆவர். பள்ளர்கள் அல்லர். அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் அதே மீனாட்சியம்மன் கோயிலில் தைப்பூசத்தன்று அறுவடைத் திருவிழாவிலும், மறுநாள் அனுப்பானடி தெப்பத் திருவிழாவிலும் பள்ளர்களின் தலைவனான அப்பகுதி ஊர் குடும்பனுக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது. உண்மை இவ்வாறு இருக்க, பள்ளர்களில் ஒரு பிரிவினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திருப்பது எந்த வகையில் நியாயமானது?
தலித் அரசியல் பேசும் அறிவுஜீவிகள் அனைவரும் பள்ளர், பறையர், சக்கிலியர் உள்ளிட்ட அனைவரையும் தலித்துகள் என்றே அடையாளப்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக, SC பட்டியலில் உள்ளவர்களைத் தீண்டத்தகாத தலித்துக்கள் என்றும், இதர BC, MBC பட்டியலில் உள்ளவர்களை உயர் சாதி இந்துக்கள் என்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள் என்றும் எழுதியும் பேசியும் வருகின்றனர். பெரியாரிய வாதிகள், தமிழ்த் தேசியவாதிகள், மார்க்சிய அறிஞர்கள் ஆகியோரும் இதனை வழிமொழிகின்றனர்.
இவர்களுடைய கருத்துப்படி பார்த்தால், SC பட்டியலில் உள்ளதாலேயே குடும்பன் தாழ்ந்தவனாகவும் தீண்டாமைக்கு உட்பட்ட தலித்தாகவும் BC பட்டியலில் உள்ளதாலேயே காலாடி, மூப்பன், மண்ணாடி ஆகியோர்களெல்லாம் சாதி இந்துக்களாகவும் வாழ்ந்து வருவது போன்ற ஒரு தோற்றம் உருவாகிறது. ஒரே குழுவைச் சேர்ந்த அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒரே சமயத்தில் தலித்தாகவும், உயர் சாதி இந்துக்களாகவும் வாழ முடியும்? பள்ளர்கள் மட்டும் எந்தப் பட்டியலில் இருந்தாலும் தலித்துகள் என்றே அழைக்கப்படுவது ஏன்? மிகவும் பரிதாப நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் நரிக்குறவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (MBC 24) உள்ளனர். அதனாலேயே அவர்கள் ஆதிக்க சாதியினராக மாறிவிடுவார்களா?
சமீப காலமாக SC பட்டியலில் உள்ள அனைத்து சாதியினருக்கும் ஆதிதிராவிடர் என்றே சாதி சான்றிதழ் வழங்கி வருகிறது தமிழக அரசு. தற்போது நடைபெற்று வரும் சாதி வாரி கணக்கெடுப்பின்போது SC பட்டியலில் உள்ள உட்பிரிவுகளுக்குப் பதிலாக அனைவரையும் ஆதிதிராவிடர் என்றே கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக தமிழ்நாடு முழுவதும் இருந்து தகவல்கள் வருகின்றன. BC, MBC, DNC, SC உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள பள்ளர்களை, SC பட்டியலில் உள்ள ஆதி திராவிடர் (பறையர்) பெயரில் அழைப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தவறானது.
சாதிவாரி பகுப்பில் இவ்வளவு குழப்பங்கள் என்றால், தலித் அரசியலில் அதைவிடப் பெரிய குழப்பங்கள்! உண்மையில், தலித், தலித் ஒற்றுமை என்பதெல்லாம் ஒருவித மாயையே. தமிழர்களை சாதிய கண்ணோட்டத்தில் தலித்துகள் என்றும் பிற்படுத்தப்பட்டோர் என்றும் பிரித்து அவர்களை ஒன்றுபட முடியாத வண்ணம் குழப்பும் அரசியலும்கூட.

Monday, August 13, 2012

இமானுவெல் படுகொலையும், சாதி வெறியும்

1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.


 இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தலித்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தலித்களின் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.

"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.

அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.

அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தலித் மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தலித்களின் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.

இது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் ஹரிஜன் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."

(தலித்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தலித்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தலித்தின் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)

இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.

கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.



உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:

"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans...."

கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:

"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having."

"It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi."

முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு: "On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".

கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.

"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."

திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத ஹரிஜனங்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.

திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது 'முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.

முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு அரிஜன். அரிஜன வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.

முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது